கணேச ஸ்துதி

வக்ர துண்ட மஹாகாய சூர்யகோடி சமபிரபா

நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா

Labels

Monday, 16 December 2013

முன்னுரை




ஸ்ரீ. ராஜகோபாலன், ஸ்ரீமதி. ராஜகோபாலன்

சாயி சேவையில்  சாயி நாதனை உலகெங்கும் அறிமுகப் படுத்திய ஸ்ரீ.நரசிம்ஹ ஸ்வாமியுடன் ஐம்பது வருடங்களுக்கு மேல் நகமும் சதையுமாற்போல்  கூடவே இருக்கும் பெரும் பேறு பெற்ற   நூற்றாண்டு கண்ட தம்பதி,
   இன்று வரை திருமகளாக சீரடிநாதன் அருட்பெருங்கருணையில் 92 வயதில் இரண்டு அடுக்கு குடியிருப்பில் இருந்தது சாயிநாதன் மந்திரில் அனைத்து பணிகளிலும் கலந்து கொள்கிறார் !!!!!
       
அகில இந்திய சாய்நாம சப்தாஹா நாம சந்கீர்த்தனம்


 ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி என்னும் நாமாவளி முன்னின்று நடத்துபவர்.
இது உலக அமைதிக்காக ஏழு நாட்கள் 168 மணி நேரம் 19 வருடமாக நடத்தப்படுகிறது.

       AKANTANAAMA SAISAPTHAHA TRUST (R)
19வது வருட  அகண்டநாமா ஜபம் சங்கீர்த்தனம்

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

தொலைபேசி    9444087999

     SRIMATHI. RADHA RAJAGOPAL  SRI. RAJAGOPAL

MURALI ANAND APARTMENTS
Appt no. II 2nd floor,

PH.04424958675

     
    இந்த வருடம்  23.12 20வது 13  திங்கட் கிழமை காலை 8மணி முதல் 30.12.2013 திங்கட் கிழமை காலை 8மணிவரை நாட்கள் 168 மணி நேரம் ஸ்ரீ அரவிந்த் கம்யுனிட்டி ஹாலில்  ( no I பாகீரதி சாலையில் ஸ்ரீனிவாச அவென்யு வில் ராஜ அண்ணாமலைபுரம் , சென்னை 28 )

 நடைபெற இருக்கும்   உலக அமைதிக்காக நடத்தப்படும் ஓம் சாயி  நாம சங்கீர்த்தனத்தில்  பங்கு கொண்டு,  ஆனந்த மயமான ஸ்ரீ சாயி தரிசனத்தையும் சாயி ஆசியையும் பெறுமாறு வேண்டுகிறோம்.  

    சென்னையில்  ஷீரடி பாபாவுக்கு  முதல் சாய் மந்திர் டிவிஎஸ் கோயில் சாலையில் அமைத்து, பின்பு மருத்துவர் ஸ்ரீ நஞ்சுண்டராவ் இல்லத்தில் வீற்று இருந்த சாயி நாதன்.
 அகில இந்திய சாய் சமாஜ்,   மயிலாப்பூர் சென்னை தமிழ் நாடு தற்போது இருக்கும் மந்திரில் முதல் முதலாக சாயி நாதனை அபிஷேக ஆராதனை நடத்தி என்றும் சாயி புகழைப்பறை சாற்ற வைக்கும் பெரும் பேறு பெற்ற சதாபிஷேக நூற்றாண்டுகண்ட தம்பதி.

   ஸ்ரீ ராஜகோபாலன்  ஸ்ரீமதி ராதா ராஜகோபாலன் தம்பதி.
வாழ்க பல்லாண்டு என உள்ளன்புடன் சாயி பக்தர்கள் அனைவரும் வாழ்த்துவோம்.
 சாயி மந்திரில் முதல் முதலாகக் சாயி பஜனைக் குழு அமைத்ததும்,  ஸ்ரீமதி. ராஜகோபாலன் தலைமையில் அமைந்த குழுவினர் தாம்.

          

                 ஸ்ரீ ஷீரடி சாயி பஜனாவளி

திவ்யநாம  சந்கீர்தனாசார் என்ற ஷீரடி பக்த மஹான்
திருமதி. ராஜகோபாலன் அவர்கள் இல்லத்திற்கே வருகை தந்து அவருடன் கலந்து ஆலோசித்து மிக இனிய ராக ஸ்வரங்களில், சாயி நமஸ்கார அஷ்டகம், சாயி வரவேற்கும் பாடல் ராரா மா சாயி ராரா, என்னும் பாடல்களையும்  சாயி அபிஷேக பாடல்களையும் மிக மிக அற்புதமான ராகங்களில் புனைந்து உள்ளார்.


மகாகணபதி துதியில் ஆரம்பித்து ( 18 )

ஸ்ரீ குரு ஸ்துதியில் ( 47 )

ஸ்ரீ சிவபெருமான்  புகழ் பாடும் பாடல்கள் (37)

ஸ்ரீ தேவி  பாடல்கள் (  42  )

நந்தலாலா ஸ்ரீ கண்ணபிரான் பாடல்கள் ( 79 )

ஸ்ரீ ரகு நாத ராமச்சந்திரன் பாடல்கள் (40  )

பாற்கடல் பரமன் நாராயணன், பாண்டு ரங்கவிட்டலன் பாடல்கள் (  24  )

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி பாடல்கள் ( 12 )

ஸ்ரீ ராம பக்த ஹனுமான் பாடல்கள் ( 8 )

மற்றும் ஸ்ரீ சபரி மலை அய்யப்பன்அல்லா, ஏசு பாடல்களுடன் ஸ்ரீ குரு வந்தன முகமாக ஸ்ரீ சத்யநாராயணன் பாடல் ,ஸ்ரீ ஷீரடி பாட மலர் பாடல் மிக ஆச்சர்யமான ராகத்துடன் அமைந்ததபாடல். மங்கள ஆர்த்தி பாடலுடன் ஸ்ரீ சாயி அஷ்டோத்தர நாமவளிகளுடன் ஸ்ரீ ஷீரடி சாயி பஜனாவளி நிறைவடைகிறது.

மங்களம் குரு தேவாய மங்களம் ஞான  தாயினே

மங்கள ஷீரடி நாதாய

மங்களம்  சாயி மகாராஜ்  பரப்ரம்ஹம ரூபனே

ஜெய் சாய் ராம்

No comments:

Post a Comment